சம்மந்தமே இல்லை... இருந்தாலும் 'வலிமை' அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Published : Feb 17, 2021, 05:48 PM IST
சம்மந்தமே இல்லை... இருந்தாலும் 'வலிமை' அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்! என்ன சொன்னார் தெரியுமா?

சுருக்கம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு தல ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் செய்த செயல் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியில் துவங்கி,  பாரத பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்பதையே ஒரு வேலையாக வைத்திருந்தனர் அஜித் ரசிகர்கள்.  

பொறுத்து பொறுத்து பார்த்த அஜித், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ஓவர் ஆட்டம் போடுவதை தாங்க முடியாமல், படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும் என்றும், உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அஜித் இப்படி கூறிய பின்னரும், அஜித் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் சில பிரபலங்களிடம் தொடர்ந்து 'வலிமை' பட அப்டேட் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ’வலிமை’ அப்டேட்டை அந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாத இசையமைப்பாளர் தமனிடம் அஜித் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்க தமனும் பதிலளித்துள்ளார்.

'வலிமை' படத்திற்காக யுவன் கம்போஸ் செய்துள்ள பாடலை கேட்டதாகவும், அது மிகவும் அருமையாக வந்திருப்பதோடு...  அஜித்துக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருக்கும் என கூறியுள்ளார். வலிமை படத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லாத இசையமைப்பாளர் ஒருவர், அப்டேட் கொடுத்துள்ளது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?