காதல் கணவர் கொடுத்த லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... ஆனந்த கண்ணீர் வடித்த மைனா நந்தினி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 17, 2021, 05:57 PM IST
காதல் கணவர் கொடுத்த லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... ஆனந்த கண்ணீர் வடித்த மைனா நந்தினி...!

சுருக்கம்

அதைப் பார்த்து எமொஷனல் ஆனா மைனா நந்தினி ஆனந்த கண்ணீர் வடிக்க, யோகேஸ்வரனுக்கும் லேசாக கண் கலங்குகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி 14ம் தேதி அன்று திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய காதல் கணவன், மனைவிக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து, அதனை புகைப்படங்களாக குரூப்பில் ஷேர் செய்து வந்தனர். தற்போது சின்னத்திரை பிரபலங்களான மைனா நந்தினி, யோகேஸ்வரன் காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடி அசத்தியுள்ளனர். 

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மைனா நந்தினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்டான சீரியலான சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார். மைனா நந்தினி 2019 நவம்பர் 10ம் தேதி நடிகர் யோகேஸ்வரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி மைனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துருவன் என பெயர் வைத்திருக்கிறார்கள்.

 

இதையும் படிங்க: ஒரு கோடி கொடுத்து ஓவியாவை வளைத்த திமுக... ‘கோ பேக்’ ட்விட்டால் தேடி வந்த ‘ஐபேக்’...!

தற்போது காதலர் தினத்தன்று மைனா நந்தினிக்கு கணவர் யோகேஸ்வரன் பல சர்ப்ரைஸ் கிப்ட்களை கொடுத்து திணறடித்துள்ளார். கேக், டெட்டி பியர், மகன் துருவனின் பெயர் பதித்த டாலர் என வரிசையாக கிப்ட் கொடுத்துக்கொண்டே வரும் யோகேஸ்வரன், இறுதியாக தன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் நந்தினி என்ற பெயரை திறந்து காட்டுகிறார். அதைப் பார்த்து எமொஷனல் ஆனா மைனா நந்தினி ஆனந்த கண்ணீர் வடிக்க, யோகேஸ்வரனுக்கும் லேசாக கண் கலங்குகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!