ரஜினி பெண்ணுக்கு மீண்டும் டைவர்ஸ்... விரக்தியின் உச்சத்தில் சூப்பர்ஸ்டார் எங்கே போனாரோ..?

Published : Jan 17, 2022, 11:29 PM ISTUpdated : Jan 17, 2022, 11:33 PM IST
ரஜினி பெண்ணுக்கு மீண்டும் டைவர்ஸ்... விரக்தியின் உச்சத்தில் சூப்பர்ஸ்டார் எங்கே போனாரோ..?

சுருக்கம்

நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் திருமணமான தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார். இவர் நடித்து வெளியான ஆடுகளம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்த படத்துக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். இதற்கு பின்பு அடுத்த கட்டத்துக்கு போன நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் திரைப்படத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு வந்தார். இதனை தொடர்ந்து சில படங்கள் நடித்த தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், நான் அபப்டியெல்லாம் இல்லை, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமாதனம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார். இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் நஐஸ்வர்யா அதிரடி முடிவுகளை எடுத்து தனுஷ் இனி தப்பிக்க முடியாதவாறு அதிரடியாக செயல்பட்டார். அதில் இனி சென்னை தவிர்த்து வெளியில் எங்கே படப்பிடிப்புக்கு சென்றாலும் அவருடனே கூட செல்வது, இரவு பார்ட்டிகளுக்கு கணவன் உடன் செல்வது, குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவரும் கலந்து கொள்வது என முடிவு செய்து இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுவதாக தனுஷை எச்சரித்து, அதன்படி சமீப காலமாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வரியாவை விவாகரத்து செய்யப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என 18 வருடங்கள் ஒன்றாக இருந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு மற்றும் அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரிக்கும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.  தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் இதுக்குறித்த கடிதத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று காலை முதல் ரஜினிகாந்த் போயல்கார்டன் வீட்டில் இல்லை என்று கூறப்பட்டது. அனைவரும் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிப்பாரோ என்ற கோணத்தில் முனுமுனுத்து வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்து விஷயம் அதில் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக தான் நடிகர் ரஜினி நிம்மதி தேடி எங்கேனும் சென்றிருப்பாரோ என்று கேள்வி எழுகிறது. முதல் மகளின் விவகாரத்து அவருக்கு கவலை கொடுத்த நிலையில் மறுமணம் பண்ணி வைத்து சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் ஒரு இடியா? ஐயோ பாவம்…!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!