ஓல்ட் ரீமேக் ஸ்டைலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள்..ரஹ்மான் குரலில் மாஸ் சாங்...

Kanmani P   | Asianet News
Published : Jan 17, 2022, 06:26 PM IST
ஓல்ட் ரீமேக் ஸ்டைலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள்..ரஹ்மான் குரலில் மாஸ் சாங்...

சுருக்கம்

பொன்னியின் செல்வன் டப்பிங் உள்ளிட்ட இதர பணிகள் முடிந்ததும், பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ரஹ்மான் குரலில் உருவாக்கப்பட்டுள்ள முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம், ஜெயராம்,  சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

டெக்னிக்கல் சைடிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 28-ந் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் அன்றைய தினம் எந்தவித போட்டியுமின்றி இப்படம் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்கான இசையை 90 கள் ஸ்டைலில் ஏ.ஆர்.ரகுமான் வடிவமைத்து வருவதாகவும். பாடல்களுக்கென மிகப்பெரிய பட்ஜெட்டை தயாரிப்பு நிறுவனம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது படத்தில் நடித்துள்ள பல்வேறு கலைஞர்களும் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்து வருகின்றனர். டப்பிங் உள்ளிட்ட இதர பணிகள் முடிந்ததும், பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ரஹ்மான் குரலில் உருவாக்கப்பட்டுள்ள முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடலின் முதல் வரி 1950 களில் வெளியான நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான ’சத்யமே லட்சியமாக கொள்ளடா’ என்ற பாடலின் தொடக்க வரியை எடுத்து பயன்படுத்தியுள்ளதாம் படக்குழு. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!