லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சோ..? ரம்யா பாண்டியனுக்கு நூல் விடும் பிரேம்ஜி!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 11:07 PM IST
Highlights

நடிகை ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பிரேம்ஜி அதற்கு செய்துள்ள கமெண்ட் வைரலாகி வருகிறது. 

நடிகை ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பிரேம்ஜி அதற்கு செய்துள்ள கமெண்ட் வைரலாகி வருகிறது. ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக நடிகை ரம்யா பாண்டியன், ஆனால் அதன் பிறகு அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதையடுத்து மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டியவாறு ரம்யா பாண்டியன் வெளியிட்ட படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து யாரிவர் என அவரை கவனிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள். அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். இடையில் சூர்யா தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியான ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இருப்பினும் விதவிதமான புகைப்படங்களைவெளியிடுவதை மட்டும் கைவிடவில்லை. பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார். சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. தற்போது நடிகை ரம்யா பாண்டியன், நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் ஆகியோருடன் தான் இருக்கும் படங்களை சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட ரம்யா, மலையாளத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் தற்போதைய ஷூட்டிங் பழனியில் நடந்து வருகிறது. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது.

 

pic.twitter.com/jbyhvBILMw

— PREMGI (@Premgiamaren)

இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரம்யா ஒரு கருப்பு நிற புடவையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கறுப்பு நிற சேலையில் முதுகு தெரியும் படி விதவிதமான போஸில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியன் பகிர்ந்திருந்தார். அதற்கு நடிகர் பிரேம்ஜி, வாய் பிளக்கும் படியான ஒரு ஜிஃப் வீடியோவை கமெண்ட் செய்திருக்கிறார். இதை அடுத்து அவருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சோ, ரம்யா பாண்டியனுக்கு பிரேம்ஜி நூல் விடுகிறாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  

click me!