தெறிக்கும் தோட்டாக்களுக்கு நடுவே வெறித்தனமாக தனுஷ்! வெளியானது 'கேப்டன் மில்லர்' டீசர்!

By manimegalai a  |  First Published Jul 28, 2023, 12:27 AM IST

நடிகர் தனுஷ் நடித்துள்ள, கேப்டன் மில்லர் படத்தின் டீசர், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் வெளியானது.
 


இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். பீரியாடிக் கதையம்சம் கொண்ட இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

நான் 12 திருமணம் செஞ்சு வச்சிருக்கேன்! என் தங்கச்சி ஸ்ரீதேவி செம்ம பிராடு! பல உண்மைகளை உடைத்த வனிதா விஜயகுமார்

இந்நிலையில் தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28-ஆம் தேதி கொண்டாட பட உள்ள நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நள்ளிரவு 12:01 மணிக்கு 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சற்று முன்னர் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக, சுதந்திரத்திற்கு போராடும்... போராளியாக தனுஷ் நடித்துள்ளார். ப்ரியங்கா மோகனும்... துப்பாக்கி ஏந்தி போர் களம் சந்திக்கும் வீர பெண்மணியாக நடித்துள்ளது டீஸரின் மூலம் தெரிகிறது.

டூ மச் கவர்ச்சி... உள்ளாடை போடாமல் கோட் அணிந்து மோசமான கிளாமரில் காஜல்! ஷாக்காக்கிய போட்டோஸ்!

ஜான் கோகென் வழக்கம் போல் வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவராஜ் குமார், மக்களுக்காக போராடுபவராக நடித்துள்ளார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியானாலும்... அனைவரின் கதாபாத்திரம் குறித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் நடுவே, தனுஷ் வெறித்தனமாக கோடாரியோடு சண்டை போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் போதே படத்தின் மீதான, எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.' கேப்டன் மில்லர்' திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!