
சின்னத்திரை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சிறு சிறு கதாபாத்திரங்கள் என்பதால் தன்னுடைய திறமையை பெரிய அளவில் வெளிகாட்ட முடியாமல் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்தார் நடிகர் கவின்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு அவ்வப்போது சில பட வாய்ப்புகள் கிடைத்தும்கூட, தனக்கான சரியான வாய்ப்புக்காக இவர் பல ஆண்டுகள் காத்திருந்தார்.
காலம் ஒருநாள் கனியும் என்பதுபோல கடந்த 2019ம் ஆண்டு கவின் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளியான "நட்புனா என்னன்னு தெரியுமா" என்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார் அவர். அதன் பிறகு லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரு திரைப்படங்களில் அவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இறுதியாக அவர் நடிப்பில் கணேஷ் இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் இவருடைய ஐந்தாவது திரைப்படம், இயக்குனர் எலன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இப்படியா நடக்கணும்..? அலறி அடித்துக்கொண்டு ஓடிய டாப்ஸி! வைரலாகும் வீடியோ
இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பாக, இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கான 40% படபிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்காக ஆறு பாடல்களை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு கவின், பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறை இயக்க உள்ள திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.