
நடிகர் தனுஷ், சமீபத்தில் தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்த நிலையில், அடுத்ததாக தன்னுடைய 51 ஆவது படத்திற்காக, இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தர், மற்றும் திரையரங்கு அதிபருமான நாராயண் தாஸ் கே. நாரங் பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷின் 51வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார் இருக்கிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார்.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!
#D51 தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளன்று (ஜூலை-28) வெளியிட உள்ளனர். இந்த படத்தில் இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்திற்காக மிகப்பொருத்தமான கதையை தயார் செய்துள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா. மேலும் இந்தப்படத்தில் பங்குபெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.