K.S Chitra : இந்தியாவின் மெலடி குயின்.. சின்னக்குயில் சித்ரா Asia Net News நிறுவனத்திற்கு அளித்த பேட்டி!

By Ansgar R  |  First Published Jul 27, 2023, 3:33 PM IST

கேரளாவின் 'நைடிங்கேல்' கே.எஸ் சித்ரா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இந்திய மொழிகளில் அவர் 18,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.


பின்னணிப் பாடகர்களான கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, ஹம்சலேகா மற்றும் எம்.எம். கீரவாணி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் பலநூறு பாடல்களை அவர் பாடியுள்ளார். 

கே.எஸ் சித்ரா இந்திய சினிமாவின் மெல்லிசை குயின் என்றும் அழைக்கப்படுகிறார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹால் அவரை இந்தியாவின் கோல்டன் வாய்ஸ் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

இந்நிலையில் நமது ஏசியாநெட் நியூஸ் உடனான அவருடைய உரையாடலில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார், தனது மகள் நந்தனாவின் பிறந்தநாள் மட்டுமே பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றும். எப்போதாவது சில சமயங்களில் அவருடைய ரசிகர்களிடம் இருந்து தான் Surpriseஆக சில முறை கேக்களை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 

​சித்ரா ஒருமுறை வெளிநாட்டிற்கு பயணம் செய்தபோது, ​​​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் சென்ற விமானம் சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டு, அந்த பயணம் மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. உடனே அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு அந்த ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. 

வந்தாரை வாழ வைக்குற ஊர் இது... உண்மை தெரியாம பேசிய பவன் கல்யாணுக்கு நாசர் கொடுத்த பளீச் ரிப்ளை

ஆனால் அடுத்த நாள் தன்னுடைய பிறந்தநாள் என்பதை சித்ராவும் அவர் கணவரும் மறந்துவிட்டார்கள். அப்போது வளர்மதி என்ற ஒரு ரசிகை அவருக்கு செல்போன் மூலம் அழைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது அவருக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது மொபைல் போன்கள் என்பது மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பள்ளி நாட்கள் மற்றும் கல்வி பற்றி பேசிய சித்ரா, தான் ஒரு ஆவரேஜ் ஸ்டுடென்ட் என்று கூறினார். "குறிப்பாக அவரது ஆசிரியர் சரஸ்வதி அம்மா, தன்னை 10ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற வைக்க பல மாதிரி தேர்வுகளை அவருக்கு நடத்தியதாகவும் சித்ரா பகிர்ந்துகொண்டார். 

எல்லா சூழ்நிலைகளும், தனக்கு வரும் எல்லா பிரச்சனைகளையும் தான் கடவுளின் கைகளில் விட்டுவிடுவதாகவும் அவர் கூறினார். 16 கேரள மாநில திரைப்பட விருதுகள், 11 ஆந்திர பிரதேச மாநில திரைப்பட விருதுகள், 4 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 3 கர்நாடக மாநில திரைப்பட விருதுகள், 1 ஒரிசா மாநில திரைப்பட விருது மற்றும் 1 மேற்கு வங்க மாநில திரைப்பட விருதுகள் உட்பட ஆறு வெவ்வேறு இந்திய மாநிலங்களிலிருந்து 36 மாநில திரைப்பட விருதுகளை சித்ரா வென்றுள்ளார். 

அவர் ஆறு தேசிய திரைப்பட விருதுகளையும், ஒன்பது பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய இசை சமூகத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக, கடந்த 2005 மற்றும் 2021ல் முறையே இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது மிக உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகியவற்றைப் பெற்றார் நமது சின்னக்குயில் சித்ரா.

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!

click me!