வந்தாரை வாழ வைக்குற ஊர் இது... உண்மை தெரியாம பேசிய பவன் கல்யாணுக்கு நாசர் கொடுத்த பளீச் ரிப்ளை

தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசியிருந்த நிலையில், நடிகர் நாசர் அதற்கு வீடியோ வாயிலாக ரிப்ளை செய்துள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். அவர் நடிப்பில் தற்போது புரோ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி உள்ளார். இது தமிழில் வெளியான விநோதய சித்தம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் வருகிற ஜுலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பவன் கல்யாண் தமிழ் திரையுலகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என புதிய விதி கொண்டுவந்துள்ளதை எதிர்த்து அவர் பேசினார். இதுபோன்று செய்தால் தமிழ் திரையுலகத்தால் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களை தர முடியாது. இன்று தெலுங்கு திரையுலகம் இந்த அளவு வளர்ச்சியை கண்டதற்கு காரணம், இங்கு அனைத்து மொழியை சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார். 

Latest Videos

உதாரணத்துக்கு சமுத்திரக்கனி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அவர் தெலுங்கு படங்களை இயக்குகிறார், அதேபோல் ஏ.எம் ரத்தினம் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து இருக்கிறார். ஆதலால் இந்த முடிவை கைவிட வேண்டும் என பவன் கல்யாண் பேசிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பவன் கல்யாணின் இந்த பேச்சு வைரலான நிலையில், அதற்கு பதிலளித்து நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக பேசிய பவன் கல்யாண்! வேடிக்கை பார்த்த சமுத்திரக்கனி! வச்சு செய்த ப்ளூசட்டை மாறன்

இப்போ நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள். 

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கு பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருக்கின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்” என நாசர் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... நடிகர் சூரியின் கிராமத்து திருவிழாவில் படையெடுத்த பிரபலங்கள்; அமைச்சர் மூர்த்தி, விஜய் சேதுபதி பங்கேற்பு

click me!