
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார்.
தற்போது இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படமும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. இதுதவிர அவர் விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
முதலில் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ள படத்தை சேகர் கம்முலா இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9:36 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதனால் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் என்ன ஆனது என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.