மிரட்டிவிட்ட STR 48 First Look.. பிரபல நாயகியிடம் நடக்கும் பேச்சுவார்த்தை - தேசிங்கு போடும் மாஸ்டர் பிளான்!

Ansgar R |  
Published : Feb 08, 2024, 09:50 PM ISTUpdated : Feb 08, 2024, 09:51 PM IST
மிரட்டிவிட்ட STR 48 First Look.. பிரபல நாயகியிடம் நடக்கும் பேச்சுவார்த்தை - தேசிங்கு போடும் மாஸ்டர் பிளான்!

சுருக்கம்

Silambarasan 48 : பிரபல நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் அவரது 48வது படத்தை பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகின்றார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்கின்ற திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் மக்கள் அனைவரது ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

அண்மையில் அவருக்கும் அந்த திரைப்படத்தில் நடித்த பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களுடைய மகள் நிரஞ்சனி அகத்தியன் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனது இரண்டாவது திரைப்படமாக பிரபல நடிகர் சிலம்பரசனின் 48வது திரைப்படத்தை இயக்கி வருகின்றார். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

டீப் நெக் பிளவுஸில் சொக்க வைக்கும் கவர்ச்சி.. நீல நிற சேலையில் அசத்திய ப்ரியாமணி - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக பெரிய அளவில் சிம்பு அவர்கள் தயாராகி வரும் நிலையில், இரட்டை வேடங்களில் அவர் இந்த படத்தில் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை உறுதி செய்துள்ளது. இதனை எடுத்து இம்மாத இறுதியில் STR 48 திரைப்படத்தின் பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அதேபோல பிரபல ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலக நடிகை மிருனாள் தாக்கூர் அவர்களிடமும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இதுவரை சிம்புவுடன் நடிக்காத நாயிகளை களம் இறக்கி, முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அவருடைய ரசிகர்களுக்கு கொடுக்க மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு வருகிறார் தேசிங்கு பெரியசாமி என்றால் அது மிகையல்ல.

CHOSEN 4 You.. பிரம்மாண்டமான முறையில் நடந்த 4ம் ஆண்டு நிறைவு விழா - பங்கேற்று அசத்திய கோலிவுட் நாயகிகள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ