
மண் சார்ந்த, யதார்த்தக் கதைகளை படமாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து, 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இந்த படம் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது.
விவாகரத்தான வில்லி நடிகையுடன் தீரா காதலில் சன் டிவி சீரியல் ஹீரோ! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!
இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும், ஃபீச்சர் ஃபிக்ஷன் பிரிவில் இந்தப் படத்திற்கு கெளரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.