
'காக்கா முட்டை' படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். இவர் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. விவாசாயத்தையும், விவாசாய மக்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், மறைந்த விவசாயி 'நல்லாண்டி' கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
இவர்களை தொடர்ந்து, விஜய் சேதுபதி, யோகி பாபு, குட்டி சொர்ணா, உள்ளிட்ட ஏற்றாலமான நடிகர்கள் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்ற இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் காசியம்மாள். 74 வயதாகும் இவரை அவரின் மகனே அடித்து கொன்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, "மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக... தாய் - மகன் என இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், கையில் கிடைத்த மரத்தால் ஆன பலகையால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காசியம்மாள் ரத்த வெள்ளத்தில் துடித்து இறந்துள்ளார். இந்த சம்பவம் பிப்ரவரி 4-ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, காசியம்மாளை கொலை செய்த குற்றத்திற்காக... அவரது மகன் நம்மக்கொடியை ஐபிசி பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.