விஜய்யால் வெறுத்துப் போன அப்பா எஸ்.ஏ.சி... தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 20, 2021, 11:08 AM IST
Highlights

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்,  நடிகர் விஜய் பெயரில் கட்சி பெயரை பதிவு செய்ய மறுப்பு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.

மேலும் தன் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இதையடுத்து பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கும் வேலையை எஸ்.ஏ.சந்திரசேகர் கைவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி  'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்'  என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று நடந்தது என்ன?... நண்பருடன் ஹேமந்த் பேசிய ஆடியோ லீக்கானது...!

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்,  நடிகர் விஜய் பெயரில் கட்சி பெயரை பதிவு செய்ய மறுப்பு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பெயரில் அப்பா கட்சி ஆரம்பிக்கப் போவதை அறிந்த விஜய், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தனது பெயரில் எவரும் கட்சி தொடங்க கூடாது என்றும், இதனால் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் என்றும் கோரியுள்ளார். மீறி அனுமதி அளித்தால் தான் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: பல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு!

விஜய் தரப்பில் நியாயம் இருப்பதாக எண்ணிய தலைமை தேர்தல் ஆணையம் எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரைந்த பெயர்களில் நடிகர் விஜய்யின் பெயரை பயன்படுத்த மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேலை அதனால் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் 'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

click me!