'தாண்டவ்' வெப் சீரிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு! அமேசான் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

By manimegalai aFirst Published Jan 19, 2021, 9:01 PM IST
Highlights

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என பலர் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என பலர் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பலர் நடிப்பில், வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர் 'தாண்டவ்'. இந்த வெப் தொடரில் உள்ள காட்சிகள் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி, இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் பலர் கடிதங்கள் மூலம் இந்த வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என கடிதம் எழுதி வருகிறார்கள். 
'தாண்டவ்' வெப் சீரிஸின் இயக்குநர் அலி அப்பாஸ், மற்றும் தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'தாண்டவ்' வெப் சீரிஸுக்கு எதிராக,  மும்பையில் உள்ள அமேசான் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தொடர் விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த வெப் சீரிஸ் குறித்து, அமேசான் தளத்திடம் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!