
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செகண்ட் ஆப் மிகவும் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் உலவி வந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் படம் வெளியாவதற்கு இரு தினங்களுக்கு முன்பு சில காட்சிகள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகின.இதனால் அதிர்ச்சியடைந்த ஒட்டுமொத்த படக்குழு அந்த வீடியோக்களை யாரும் இணையத்தில் ஷேர் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். மேலும் படத்தின் காட்சிகள் எப்படி கசிந்தது என தயாரிப்பாளர் குழு விசாரணை நடத்தியது.
அதில், ‘மாஸ்டர்’ படத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றில் கொடுத்துள்ளது, அங்கு வேலை செய்த ஊழியர் ஒருவர் வீடியோக்களை லீக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் டிஜிட்டல் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.