அட்லி இயக்கி வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக காமியோ ரோலில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படம் மூலம் அறியப்படுபவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மிகப் பிரபல நடிகை ஆவார். அதோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முன் வரிசையில் இருப்பவர் தீபிகா படுகோன். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். வித்யாசமான உடைய அணிந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் தீபிகா படுகோன் சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறார். இவர் சமீபத்தில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறி இருந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் நான் வெறுமையாக உணர்ந்ததால் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது என் அம்மா உதவினார் அவரை நான் கடவுள் அனுப்பியதாகவே நினைத்தேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது காதல் கணவர் ரன்வீர் குறித்து பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது ஏற்கனவே பலமுறை தன் வாழ்க்கை ரகசியங்களை புட்டு புட்டு வைத்த தீபிகா படுகோன் தற்போது ரன்வீரை திருமணம் செய்து கொள்ள விரும்பவே இல்லை என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கூட தெரியவில்லை. ரன்விரை சந்திப்பதற்கு முன்பே கடந்த கால அனுபவங்களை வைத்து திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவில் இருந்தேன். அதோடு கண்டிப்பாக நாயகனை மணந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
மேலும் செய்திகளுக்கு...அடடடா..உடல் இளைத்த பின்னர் தாறுமாறாக போஸ் கொடுக்கும் வரலக்ஷ்மி சரத்குமார்
இண்டஸ்ட்ரியில் ஹீரோக்களுக்கு ஸ்டெபிலிட்டி இல்லை அவர்களைப் பற்றி பல்வேறு கிசுகிசுகள் வேறு வேறு நபருடன் உடல் ரீதியாக தொடர்புள்ள வைத்திருப்பார்கள் என்கிற கிசுகிசு வேறு.. இதனால் தான் ஹீரோக்களை கட்டாயம் கல்யாணம் பண்ணிக்க கூடாது என உறுதியாக இருந்தேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்
மேலும் கிட்டத்தட்ட 13 வருடங்களாக என் உடன் நட்பாக இருந்தவர்கள் கூட என்னை ஏமாற்றிவிட்டு போனார்கள். இந்த வலியுடன் நான் இனிமேல் மற்றவர்களிட்மிருந்து விலகி இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் ரன்வீர் அறிமுகமானவுடன் அதை எல்லாம் மாற்றி விட்டேன் காதலை நம்பினார் திருமணம் மரியாதையை அதிகரித்துள்ளது. இது எல்லாம் மேஜிக் போல் உணர்கிறேன் என்றார். இப்போது நான் உங்கள் முன் நின்று இதைப்பற்றி பேசுவதற்கு கூட ரன்வீரின் காதல் தான் என் விஷயத்தில் மட்டுமல்ல யாருடைய விஷயத்திலும் இதையே தான் சொல்வேன். அது உங்கள் உயிரை காப்பாற்றும் என்று விளக்குகிறார்.
இந்த நட்சத்திர நாயகியின் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.பான் இந்தியா ரேஞ்ச் புராஜெக்ட் கே படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அமிதாப்பும் முக்கிய ரோலில் நடிக்கிறார். அதோடு அட்லி இயக்கி வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக காமியோ ரோலில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...பிரம்மாண்ட சம்பளத்துடன்... ஷங்கர் படத்தில் வில்லனாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா- எத்தனை கோடி வாங்கியுள்ளார் தெரியுமா?