
பாலிவுட்டின் க்யூட் ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் ஜோடியின் பயணம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திருமணத்தில் முடிந்தது. முதலாம் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாட தயாராகி வந்த நிலையில், திடீர் உடல்நல குறைவால் தீபிகா படுகோனே பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷ் பட வாய்ப்பிற்காக மீரா மிதுன் செய்த காரியம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்... மீரா மிதுனை மரண பங்கம் செய்த நெட்டிசன்கள்...!
கடந்த வாரம் பெங்களூருவில் நடந்த தனது தோழியின் திருமணத்தில் கணவர் ரன்வீர் உடன் பங்கேற்றார் தீபிகா. அங்கு சங்கீத் நிகழ்ச்சியில் கணவருடன் தீபிகா போட்ட ஆட்டம் சோசியல் மீடியாவில் செம வைரலானது. திருமணம் முடியும் வரை பெங்களூரில் தங்கிய ரன்வீர், தீபிகா ஜோடி அந்த நிகழ்வை மிகவும் என்ஜாய் செய்தனர். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவித்தது.
அதனால் அந்த அசத்தலான காதல் தம்பதி மீது கண்பட்டு விட்டது. திருமண நாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் தீபிகா படுகோனே. வாயில் தர்மாமீட்டர் வைத்துள்ளது போன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா. முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தீபிகாவிற்கு இந்த மாதிரியானது அவரது ரசிகர்களை மிகவும் கவலையடைச் செய்துள்ளது. தீபிகா படுகோனே விரைவில் பூரண குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.