வில்லனாக மாறிய கவிஞர் கண்ணதாசனின் பேரன்..! விட்ட இடத்தை பிடிப்பாரா?

Published : Nov 11, 2019, 06:24 PM IST
வில்லனாக மாறிய கவிஞர் கண்ணதாசனின் பேரன்..! விட்ட இடத்தை பிடிப்பாரா?

சுருக்கம்

பிரபல கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன்.  இவர் இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலனிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின், ஏசி. துறை இயக்கிய  'பொன்மாலை பொழுது' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.  

பிரபல கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன்.  இவர் இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலனிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின், ஏசி. துறை இயக்கிய  'பொன்மாலை பொழுது' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

இந்த படத்தை தொடர்ந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு, இயக்குனர் டீகே இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்த, திகில் படமாக உருவான,  'யாமிருக்க பயமேன்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.

இந்த படத்திற்கு பின் அதிக அளவு ஆதவை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை.  இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கும்,  'காளிதாஸ்' படத்தில் ஆதவ் நடிகர் பரத்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் பரத் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகை ஷீத்தல், கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தமிழ்சினிமாவில் சிறு வயதிலேயே, துணை இயக்குனர், கதாநாயகன் என இருந்தும், தற்போது வில்லனாக மாறியுள்ளார் ஆதவ். 

தமிழ் சினிமாவில், வில்லனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹீரோவாக பல நடிகர்கள் கம் பேக் கொடுத்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, அப்படி ஒரு இடத்தை ஆதவ் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!