மூச்சுத் திணறல் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கர் ஐ.சி.யு.வில் அனுமதி...

Published : Nov 11, 2019, 05:34 PM IST
மூச்சுத் திணறல் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கர்  ஐ.சி.யு.வில் அனுமதி...

சுருக்கம்

தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் 3 முறை தேசிய விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள்,  6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.

தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் எனப் புகழப்படும் லதா மங்கேஷ்கர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 90.

1929ம் ஆண்டு மத்திய பிரதேசம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். தனது ஆறாவது வயதில் பாடத்துவங்கிய அவர் இந்தியில் மட்டும் ஆயிரம் படங்களுக்கும் மேல் பாடியிருக்கிறார். தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் 3 முறை தேசிய விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள்,  6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.

தமிழில் இளையராஜா இசையில் ‘ஆனந்த்’படத்தில் ‘ஆராரோ ஆராரோ’, ‘என் ஜீவன் அழைக்குது’படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’போன்ற இனிய பாடல்களைப் பாடியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை என்று தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்பவர்.

இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக  மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் சிகிச்சையில்  உள்ளார். அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?