’ஏக் தோ தீன்’...31 ஆண்டுகளுக்குப் பிறகும் அசராமல் சவாலுக்கு அழைக்கும் மாதுரி தீக்‌ஷித்...

Published : Nov 11, 2019, 05:11 PM IST
’ஏக் தோ தீன்’...31 ஆண்டுகளுக்குப் பிறகும் அசராமல் சவாலுக்கு அழைக்கும் மாதுரி தீக்‌ஷித்...

சுருக்கம்

குறிப்பாக அப்பாடலில் நடிகை மாதுரி தீக்‌ஷித்தின் நடன அசைவுகள் செம கலக்கலாக இருந்தன. அப்படம் ரிலீஸாகி [நவம்பர்11,1988] இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ரசிகர்களுக்கு நினவூட்டியுள்ள மாதுரி, தனது 52 வயதிலும் ஒருவர் இவ்வளவு ஸ்லிம்மாக என்று பொறாமைப்படும் தோற்றத்தில் இருந்துகொண்டு, அப்பாடலுக்கு மிகப் பிரமாதமாக சில ஸ்டெப்களும் போட்டுள்ளார்.

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த ‘ஏக் தோ தீன்’பாடலுக்கு டிக் டாக்கில் சவாலான மூவ்மெண்டுகள் அமைத்து என்னோட போட்டியிட்டு ஆடத் தயாரா?என்று தனது ட்விட்டர் பதிவு மூலம் அறைகூவல் விடுத்திருக்கிறார் நடிகை மாதுரி தீக்‌ஷித்.

லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் என்.சந்திரா இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘தேஸாப்’.அனில்கபூர், மாதுரி தீக்‌ஷித் ஜோடி சேர்ந்த இப்படத்தின் ‘ஏக் தோ தீன்’பாடல் இந்தியா முழுக்க பிரபலமானது. குறிப்பாக அப்பாடலில் நடிகை மாதுரி தீக்‌ஷித்தின் நடன அசைவுகள் செம கலக்கலாக இருந்தன. அப்படம் ரிலீஸாகி [நவம்பர்11,1988] இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ரசிகர்களுக்கு நினவூட்டியுள்ள மாதுரி, தனது 52 வயதிலும் ஒருவர் இவ்வளவு ஸ்லிம்மாக என்று பொறாமைப்படும் தோற்றத்தில் இருந்துகொண்டு, அப்பாடலுக்கு மிகப் பிரமாதமாக சில ஸ்டெப்களும் போட்டுள்ளார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அவர்,...இந்த டிக்டாக்கில் என்னோடு போட்டி போட்டு நடனமாடுங்கள். உங்களில் சிலருக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன’என்று பதிவிட்டிருக்கிறார். அதை நம்ம காமெடியன் நடிகர் விவேக் தனது பக்கத்தில் ஷேர் செய்து,...அடடே 31 வருஷங்களுக்கு அப்புறமும் இன்னும் அதே வனப்போட அப்படியே இருக்காங்க பாருங்க’என்று வழிமொழிந்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?