குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’!

Published : Aug 01, 2022, 08:09 PM IST
குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’!

சுருக்கம்

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன. அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.

ஒரு குப்பைக் கதை, 'நாயே பேயே' ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் 'லோக்கல் சரக்கு'. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்: பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!
 

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன. அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை. நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.

மேலும் செய்திகள்: 'பத்து தல' படத்தில் படு மாஸ் கெட்டப்பில் சிம்பு..! வைரலாகும் வேற லெவல் லுக்..!

’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.

மேலும் செய்திகள்: வதந்தியால் பின்னுக்கு தள்ளப்பட்ட நயன்தாரா.? உண்மை வெளியானதால் மீண்டும் கிடைத்த முதலிடம்! நிம்மதியான ரசிகர்கள்!

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர். ’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட்டிங் பாடல்களாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்