
’இந்தியன் 2’படத்துக்காக மிக முக்கியமான ஆக்ஷன் காட்சியை எடுக்க போபால் கிளம்பிக்கொண்டிருக்கும் இயக்குநர் ஷங்கர் வரும் நவம்பர் 1ம் தேதி அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் திட்டமிட்டபடி ‘இந்தியன் 2’படப்பிடிப்பு போபாலில் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆரூர் தமிழ்நாடன் என்பவர் ஜூகிபா என்ற பெயரில் இனிய உதயம் இதழில் தான் எழுதியிருந்த கதைதான் ‘எந்திரன்’படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று அப்படம் ரிலீஸான சமயம் இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீது வழக்குப் போட்டிருந்தார்.
அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது. நாங்கள் கதையை திருடவில்லை. எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர். இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அவ்வப்போது டிஸ்மிஸ் ஆவதும் பின்னர் உயிர்பெறுவதுமாக இருந்த வழக்கு தற்போது மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது புகார்தாரரான எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில்ஆஜரானார். இந்த வழக்கை எழும்பூர் 2வது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1 அன்று 2 வது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று இயக்குநர் சங்கர் மற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13வது நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.