விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன்...! இப்படி ஒரு நிலையா..? பரிதவித்து போன ரசிகர்கள்..! புகைப்படம் இதோ...

Published : Oct 19, 2019, 03:49 PM ISTUpdated : Oct 19, 2019, 04:09 PM IST
விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன்...! இப்படி ஒரு நிலையா..? பரிதவித்து போன ரசிகர்கள்..!  புகைப்படம் இதோ...

சுருக்கம்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்.   

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். 

தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்' என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் நான்கு படங்கள் உள்ளன. 

இந்நிலையில் இவர் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளியான தகவலும், அதுகுறித்து வெளியாகியுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தகவலை மஞ்சிமா மோகனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்... கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு எதிர்பாராத விபத்து என் வாழ்க்கையில் நடந்து விட்டது. அதற்கான சிறு அறுவை சிகிச்சையும் தன்னுடைய காலில் நடந்து முடிந்துள்ளது. இதனால் தற்போது ஓய்வில் இருக்க கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும், கூறி...

மும்பெல்லாம் தன்னிடம், "நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை என்ன?" என்று சிலர் கேட்பார்கள். அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை என்று பதிலளித்தேன். ஆனால் இப்போது  எனக்கு நிகழ்ந்து விட்டது.

படுத்த படுக்கையிலேயே சில நாட்கள் இருப்பது எளிதானது அல்ல. என் வேலை உள்பட பல விஷயங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் என்னை நானே புரிந்து கொள்வதற்கு இந்த காலம் எனக்கு கைகொடுத்தது. இப்போது நான் என்னை முழுமையாக உணர்கிறேன். இந்த நிலைமை என்னை முற்றிலும் மாற்றிவிட்டது மட்டுமின்றி என்னை ஒரு வலிமையான நபராக்கியது. எல்லோரும் சொல்வது போல் "எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது, இதுவும் கடந்து போகும்’ என தெரிவித்துள்ளார்.

அவரின் தற்போது நிலையை குறிக்கும் விதமாக கம்பியை பிடித்தபடி தான் நடக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து மஞ்சிமாவின் ரசிகர்கள் செம்ம பீலிங் உள்ளார். பலர் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!