’உங்கள விட உங்க பொண்ணுதான் நல்லா நடிச்சிருக்காங்க’...’பிகில்’பட நடிகையிடம் ஓப்பனாக சொன்ன விஜய்...

Published : Oct 19, 2019, 04:06 PM ISTUpdated : Oct 19, 2019, 04:09 PM IST
’உங்கள விட உங்க பொண்ணுதான் நல்லா நடிச்சிருக்காங்க’...’பிகில்’பட நடிகையிடம் ஓப்பனாக சொன்ன விஜய்...

சுருக்கம்

ஆனால் அப்படத்துக்கு அடுத்து வந்த வாய்ப்புகளை படிப்புக்காக கைவிட நேர்ந்தது. அந்தப் படங்களில் விஜய்யின் பிகிலும் ஒன்று. இயக்குநர் அட்லி ‘96 படம் பார்த்துவிட்டு தன் மகளுக்கு ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது என்று அழைத்தபோது அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுத வேண்டியிருப்பதால் ‘நோ சொன்னதாக தேவதர்ஷினி அப்போதே கூறியிருந்தார்.  

நடிகர் ரோபோ சங்கர் தன் மகள் ‘பிகில்’படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீர்ப் பதிவு எழுதியிருந்த நிலையில், அப்படத்தில் விஜய்யின் அக்காவாக நடித்துள்ள தேவதர்ஷினி அதே படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனது மகள் இழந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘96 படத்தில் நடித்த தேவதர்ஷினியின் மகள் நியதி அவரது துடிப்பான நடிப்புக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டார். ஆனால் அப்படத்துக்கு அடுத்து வந்த வாய்ப்புகளை படிப்புக்காக கைவிட நேர்ந்தது. அந்தப் படங்களில் விஜய்யின் பிகிலும் ஒன்று. இயக்குநர் அட்லி ‘96 படம் பார்த்துவிட்டு தன் மகளுக்கு ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது என்று அழைத்தபோது அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுத வேண்டியிருப்பதால் ‘நோ சொன்னதாக தேவதர்ஷினி அப்போதே கூறியிருந்தார்.

தற்போது பிகிலில் விஜயின் அக்காவாக நடித்து முடித்திருக்கும் தேவதர்ஷினி அதுகுறித்து இன்னொரு சுவாரசியமான தகவலையும் வெளியிட்டார். அதில்,...’பிகில்  படத்தில் என் மகளும் சிங்கப்பெண்களில் ஒருவராக நடிக்க வேண்டியது. ஆனால்  அவளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. என் மகள் விஜய்யின் தீவிர ரசிகை. என்னுடன் ஒருநாள் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாள். ஆனால் பிஸியாக  ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால் போட்டோ எடுக்க சந்தர்ப்பம் கிட்டவில்லை. சிறிது நேரம் கழித்து விஜய் என்னிடம் வந்து ’96 படத்துல உங்கள விட உங்க பொண்ணு நல்லா நடிச்சிருந்தாங்க. நான்  சொன்னேன்னு சொல்லிடுங்கஅப்படினு சொன்னாரு. உடனே  நான் அவ இங்க தான் இருக்கா. நீங்களே சொல்லிடுங்கன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். அப்புறம் விஜய் சாரும், நியதியும் 10 நிமிஷம் பேசினாங்க’ என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!