கொரோனா பீதி: அதிரடியாக தளபதி விஜய் வீட்டிற்கு விசிட் அடித்து அதிர வைத்த சுகாதாரதுறை அதிகாரிகள்!

Published : Mar 30, 2020, 10:39 AM IST
கொரோனா பீதி: அதிரடியாக தளபதி விஜய் வீட்டிற்கு விசிட் அடித்து அதிர வைத்த சுகாதாரதுறை அதிகாரிகள்!

சுருக்கம்

கொரோனா வைரஸில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வு ஒரு பக்கம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், இந்த வைரஸ் இந்தியாவின் உள்ளே அதிகம் பரவாமல் தடுக்கும் முயற்சிகளையும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

குறிப்பாக, சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமை படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் விஜய்யின் பெயரும், சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் இருந்ததை அடுத்து, நீலாங்கரையில் உள்ள தளபதியின் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், அதிரடியாக விசிட் அடித்துள்ளனர்.

பின்னர் கடந்த 6 மாதமாக விஜய் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த யாரும் வெளிநாடு செல்லவில்லை என தெரியவந்தபின், நோட்டீஸ் எதையும் ஒட்டாமல்... வீட்டில் கிருமி நாசினியை மட்டும் தெளித்து விட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பை எற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி