
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஊறடங்கு அறிவித்தும் யாரும் அதை கேட்டு அடங்கி இருப்பதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் மிக வேகமாக பரவிவருகிறது உயிர்கொல்லி நோயான கொரோனா. இந்நிலையில் மக்களுக்கு உதவ அநேக சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகையான ஷிகா மல்ஹோத்ரா கொரோனா வைரஸ் பரவி வருவதால் சேவை செய்ய விரும்பி தனது பழைய வேலையான நர்ஸ் பணிக்கு திரும்பியுள்ளார். டெல்லியில் உள்ள வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் படித்து பட்டம் பெற்ற இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக தனது வேலை தொடங்கியுள்ளார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “வர்த்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் முறைப்படி மருத்துவம் படித்த நான் 5 வருடம் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஒரு நடிகையான என்னை உற்சாகப்படுத்தியது போன்று இந்த நர்ஸ் பணியிலும் தன்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.