என் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்!

Published : Mar 29, 2020, 09:27 PM IST
என் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்!

சுருக்கம்

கமல்ஹாசனும் இதை உடனடியாக மறுத்தார். பின்னர் நடிகை கவுதமி பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டதாக மாநகராட்சி விளக்கம் அளித்தது. மேலும் அந்த நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது.  

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துவதற்கான நோட்டீஸை என் வீட்டில் ஒட்டினால் கவலையில்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தும் நோட்டீஸ் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஒட்டப்பட்டது. இதனால், கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனும் இதை உடனடியாக மறுத்தார். பின்னர் நடிகை கவுதமி பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டதாக மாநகராட்சி விளக்கம் அளித்தது. மேலும் அந்த நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து நடிகை கவுதமியின் நீலாங்கரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். மேலும் அங்கு கிருமிநாசினி திரவத்தையும் தெளித்தார்கள். இதுகுறித்து நடிகை கவுதமி கூறுகையில், “நான் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா சென்று திரும்பினேன். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. கொரோனா வைரஸ் சோதனைக்கு என்னை யாரும் உட்படுத்தவும் இல்லை. இப்போது நான் ஈசிஆரில் வசிக்கிறேன். என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டப்படவில்லை. அப்படியே ஒட்டினாலும் கவலையில்லை” என்று தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!