கொரோனா வைரஸ் தாக்கத்தால், அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர்களுடைய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர்களுடைய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் செய்திகள்: சண்டைபோட்ட நடிகையை அடக்கிய காதலன்! மயக்கம் வந்தது போல் நடித்து அந்த இடத்தில் அடித்துவிட்டு எஸ்கேப்! வீடியோ
undefined
மேலும் திரையுலகை சேர்ந்த பலர் தற்போது வரை, பட வாய்ப்புகளும், குடும்பத்தையும் காப்பாற்ற போதிய அளவு வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு, உதவும் நோக்கத்தில், அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தானாக முன் வந்து உதவிகள் செய்த போதிலும், அது அவர்களுக்கு போதுமான அளவு இருந்ததா என்றால் சந்தேகமே.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர், பட வாய்ப்புகளும், வருமானமும் இல்லாததால்... தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக பழம் விற்று வருகிறார். இதுகுறித்த புகைப்பங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: நடிகருடன் காதல் திருமணம்... கள்ளக்காதல் பிரச்சனை! 4வது முறையாக பெயரை மாற்றி தமிழில் கவனம் செலுத்தும் நடிகை!
ஆயுஷ்மான் குரானாவுடன் ’ட்ரீம் கேர்ள்ஸ்’ என்ற படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர். இவர் பல பாலிவுட் படங்களில் சிறு சிறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாய்ப்பும், இல்லாமல் இருக்கும் இவர், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற பழம் விற்று வருகிறார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகவே, இவருக்கு முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் முன்வந்து பண உதவி செய்ய வேண்டும் என்றும் பட வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள் .