ரசிகர்களின் கனவில் மண்ணை போட்ட ஜோதிகா... “சந்திரமுகி 2” குறித்து தெரிவித்த அதிரடி கருத்து...!

Published : May 22, 2020, 02:44 PM IST
ரசிகர்களின் கனவில் மண்ணை போட்ட ஜோதிகா... “சந்திரமுகி 2” குறித்து தெரிவித்த அதிரடி கருத்து...!

சுருக்கம்

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. 

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது. 

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி. இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை  இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம். 

அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமல்லாது ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாகவும், அதில் ஒரு கேரக்டர் சந்திரமுகியாக மிரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிகாவிற்கு  சந்திரமுகி  படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. 

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் விளம்பரத்திற்காக கொடுத்துள்ள பேட்டியில், சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்காக தன்னிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜோதிகா சந்திரமுகி 2 படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. மீண்டும் சந்திரமுகியாக மாறிய ஜோதிகாவை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!