'குக் வித் கோமாளி' 3 ஆவது சீசன் எப்போது..? வெங்கடேஷ் பட் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Published : Jul 09, 2021, 07:37 PM ISTUpdated : Jul 09, 2021, 07:40 PM IST
'குக் வித் கோமாளி' 3 ஆவது சீசன் எப்போது..? வெங்கடேஷ் பட் கொடுத்த  சூப்பர் அப்டேட்..!

சுருக்கம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்பது குறித்த அப்டேட் தகவலை நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.  

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்பது குறித்த அப்டேட் தகவலை நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்தது என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.  இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

'குக் வித் கோமாளி' முதல் சீசனை விட, இரண்டாவது சீசனில்... நடுவர்களை குழந்தைகள் போல் மாறி, ஓவர் குதூகலம் செய்து வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக செஃப் தாமு, செட்டில் உள்ள அனைவருக்குமே அப்பாவாகவே மாறிவிட்டார். இவருடன் புகழ் இணைந்து அடிக்கும் காமெடிகள் வேற லெவல். இதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அதிகம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், புகழ், பாலா, பவித்ரா, அஸ்வின், ஷிவானி, ஷகிலா என அடுத்தடுத்து பிரபலங்கள் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி வருகிறார்கள். அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படமான ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எப்போது 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்கிற ஸ்வீட் அப்டேட் கொடுத்துள்ளார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட். இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களை மகிச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!