இந்திய அளவில் தட்டி தூக்கிய "ரவுடி பேபி" பாடல்..! வேற லெவல் சாதனை..!

Published : Jul 09, 2021, 04:37 PM IST
இந்திய அளவில் தட்டி தூக்கிய "ரவுடி பேபி" பாடல்..! வேற லெவல் சாதனை..!

சுருக்கம்

ஏற்கனவே தனுஷ் - சாய்பல்லவி இணைந்து நடித்த 'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில், அதிக லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது.  

ஏற்கனவே தனுஷ் - சாய்பல்லவி இணைந்து நடித்த 'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில், அதிக லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்: ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்..? வைரலாகும் ராஷ்மிகாவின் பதில்.!
 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.  நடனப்புயல் பிரபு தேவா நடனம் அமைக்க தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை யூ-டியூப் மூலமாக இதுவரை 1  பில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்த முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது. 

மேலும் செய்திகள்: டைட் உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் - அவுட்..! மிரள வைக்கும் பிக்பாஸ் ஷிவானி...!
 

இதை தொடர்ந்து, மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது "ரவுடி பேபி' பாடல், அதாவது... இதுவரை இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களால் லைக் பின்னப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்கிற சாதனையை தான் தற்போது ரவுடி பேபி படைத்துள்ளது. இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!