
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார்.
இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சம் என்னவென்றால், அது கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர்.
வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 3-வது சீசனுக்கான அறிவிப்பு வந்தாச்சு. இதற்கான மாஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புரோமோவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உடன் கோமாளிகளான மணிமேகலை, சிவாங்கி, பாலா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
ஆனால் ரசிகர்களின் பேவரைட் கோமாளியான புகழ் இந்த புரோமோவில் இடம்பெறவில்லை. இதன்மூலம் அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் புகழ் இந்த சீசனில் கலந்துகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.