நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்! பூங்கா பிரச்சனைக்கு முற்று புள்ளி!

Published : Sep 07, 2020, 04:12 PM IST
நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்! பூங்கா பிரச்சனைக்கு முற்று புள்ளி!

சுருக்கம்

இந்நிலையில் காந்த 4 ஆம் தேதி நடந்த இந்த பிரச்சனைக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி, காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி சமூக வளைத்தைல் தெரிவித்துள்ளார். இதனை சம்யுக்தாவும் ஏற்று கொண்டதாக கூறி உள்ளதால் இந்த பூங்கா பிரச்சனைக்கு,  விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இதில் காஜல் அகர்வாலுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் சம்யுக்தா. ஒரே படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சம்யுக்தா, பப்பி, வாட்ச்மேன் ஆகிய படங்களில் நடித்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் ஷூட்டிங் இல்லாததால் பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வரும் சம்யுக்தா, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோஸையும், வியர்க்க விறுவிறுக்க செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போடும் வீடியோக்களையும், வளையத்தை வைத்து விதவிதமாக வித்தை காட்டும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் பயிற்சி செய்வதற்காக தனது 2 தோழிகளுடன் பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்போர்ட்ஸ் பிராவுடன் சம்யுக்தா பயிற்சியை ஆரம்பித்ததை பார்த்த வயதான பெண்மணி ஒருவர், நீங்கள் என்ன கேப்ரே டான்சர்களா? என்ன உடை இது என திட்ட ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஆண்களும் அவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர். 

சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கு நடப்பவற்றை நேரலை செய்ய ஆரம்பித்தார். அதில் நான் வளையங்களை வைத்து பயிற்சி மேற்கொள்ள வந்தேன். வயதான பெண்மணி உள்ளிட்ட சிலர் எங்களை வெளியே போங்க. இது என்ன ஆபாசமான உடை என திட்டினர். என் தோழியையும் அந்த பெண்மணி தாக்கினார் என பேசிக்கொண்டிருந்த சம்யுக்தா.

பின்னர் உடனடியாக தனது மேலாடையை கழட்டி, பாருங்கள் இது ஸ்போர்ட்ஸ் பிரா, ஸ்போர்ட்ஸ் டிராக் உடன் தான் பயிற்சி செய்தேன். இதில் என்ன தப்பு என கேட்டார். இந்த பிரச்சனை தீவிரம் ஆனதும், சம்யுக்தா உடையை விமர்சித்து பேசியவர் காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி என தெரியவந்தது.

பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கு அங்கு வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக FIR பதிவு செய்ததாகவும்,  எத்தனை காலத்திற்குதான் ஒரு பெண்ணின் உடையை வைத்து விமர்சனம் செய்வீர்கள்..? என கோவமாக கேள்வி எழுப்பியபடி பதிவு ஒன்றையும் போட்டார் சம்யுக்தா. 

இந்நிலையில் காந்த 4 ஆம் தேதி நடந்த இந்த பிரச்சனைக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி, காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி சமூக வளைத்தைல் தெரிவித்துள்ளார். இதனை சம்யுக்தாவும் ஏற்று கொண்டதாக கூறி உள்ளதால் இந்த பூங்கா பிரச்சனைக்கு,  விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?