
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை நேற்று சமூக வலைத்தளம் மூலம் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருடைய காதலி மலைக்கா அரோராவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பொருளாதார ரீதியில் அவஸ்தை படும் மக்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் மெல்ல மெல்ல பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இது போன்ற தளர்வுகளால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தை கடந்து, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. சாதாரண மக்களை தாண்டி, பல பிரபலங்களையும் பதம் பார்த்து வருகிறது கொரோனா. அந்த வகையில், ஏற்கனவே, பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா, மற்றும் மாமனார் அமிதாப் பச்சன் என ஸ்டார் குடும்பத்தையே ஆட்டி வைத்தது கொரோனா.
இவர்களை தாண்டியும் பல பிரபலங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுத்து மீண்டு வந்தனர்.
இந்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்,அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார். அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து, தற்போது தன்னை தானே தனிமை படுத்தி கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அர்ஜுன் கபூருடன் நெருக்கமாக இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என கூறப்பட்டதால், நேற்றைய தினமே அவருடைய காதலி மலைக்கா அரோரா, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என கூறப்படும் நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.