போதை மருந்து இல்லாத திரைப்பட விருந்தே இல்லை... பகீர் கிளப்பிய விஷால் பட நடிகை!

By manimegalai aFirst Published Sep 6, 2020, 8:06 PM IST
Highlights

போதை பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் விஷால் பட நடிக்க, பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
 

போதை பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் விஷால் பட நடிக்க, பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
 
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாகவும், சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார். 

இந்த விவகாரத்தில்  கன்னட நடிகை ராகினி திரிவேதியுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து போதை பொருள் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், விஷால் நடித்த ’ஆம்பள’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மாதவி லதா என்பவர் ’கன்னட திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் போதைப் பொருள் பழக்கம் உள்ளது என கூறி அதிரவைத்துள்ளார்.
 
குறிப்பாக போதை மாத்திரைகள் இல்லாமல் சினிமா விருந்துகள் நடப்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி தாபித்து வருவதாகவும் மாதவி லதா தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

click me!