
முறைமாமன், முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னை தேடி, சுயம்வரம், உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை சீரிஸ், வந்தா ராஜாவா தான் வருவேன் என ரசிகர்கள் மனநிறையும் படங்களை கொடுப்பதில் வல்லவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் படம் உருவாகி வருகிறது.
மல்டி ஸ்டார் படமான இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்களும், அமிர்தா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, தேவதர்ஷினி, சம்யுக்தா சண்முகம், யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அவ்னி சினிமாக்ஸ் - குஷ்பூ சுந்தர் & பென்ஸ் மீடியா - ஏசிஎஸ் அருண் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அமேசான் ப்ரைம் வீடியோவில் கலக்கும் 7 படங்கள் ...லிஸ்ட் இதோ..
முன்னதாக இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமேக் செய்து வெளியாகி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. படம் அக்டோபர் ஏழாம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது சுந்தர் சி, ஜீவா, யோகி பாபு உள்ளிட்டோர் படம் குறித்தான சுவாரசிய தகவல்களையும் அதில் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவை தயாரிப்பு நிறுவனமான அவ்னி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி
தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் மிகவும் ரிலாக்ஸாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சுந்தர் சி. அதேபோல யோகி பாபு தனது கேரக்டர் குறித்து பேசுகையில் மேரேஜ் பிளானர் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது பின்னர் இயக்குனரிடம் கேட்டு புரோக்கர் தானே என தெரிந்து கொண்டேன் என கலகலப்பாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.