தமிழ் டாப் ஹிரோக்களுக்கு தாயாரானது ஆப்பு...!! படம் தோல்வியடைந்தால் பணத்தை திருப்பி கொடுக்கணும்..!

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2019, 11:52 AM IST
Highlights

உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்விக்கு  அந்த நடிகர்களே பொறுப்பேற்று  தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் ,  திரையரங்க உரிமையாளர்களின்  நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

ரஜினி விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியடைந்தால் அந்த படத்தால் ஏற்படும் நஷ்டத்தை அந்த நடிகர்களை ஈடுகட்ட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  சிலநேரங்களில் எதிர்பார்த்த அளவிற்கு ரஜினி ,  விஜய் ,  கமல் , அஜித் போன்றோரின்   திரைப்படங்கள் சில நேரங்களில் எதிர்பார்தபடி  வெற்றிபெறுவதற்கு மாறாக  தோல்வியடைகிறது.  அந்நேரத்தில் அந்தப்படத்தில் செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. 

இதனால் அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதுடன் ,  பலர் கடன் தொல்லையால் சிக்கி கொள்ளும் சூழலுக்கும் ஆளாகி விடுகின்றனர்.   ஆனால் யாரை நம்பி பணம் முதலீடு செய்யபட்டதோ அந்த நடிகர்கள்  எந்த பாதிப்புமின்றி  ஒதுங்கி விடுகின்றனர் . இதன் காரணமாக அந்த பாதிப்பிற்கு அந்த உச்ச நடிகரும் பொறுப்பேற்க வேண்டும் என பல நாட்களாக தயாரிப்பாளர்கள் , வினியோகஸ்தர்கள்,   திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் கோவை ,  ஈரோடு ,  திருப்பூர்,  உள்ளிட்ட மாவட்ட திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது .  இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .  குறிப்பாக தமிழக அரசின் மாநிலவரி  8 சதவீதத்தை வரும் பிப்ரவரி  மாதத்திற்குள் திரும்பப்பெற வேண்டும் இல்லையெனில் மார்ச் 1-ஆம் தேதி முதல் திரையரங்கள் மூடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் அதாவது அமேசான் ,  நெட்ப்ளிக்ஸ் ,  உள்ளிட்ட தலங்களில் படங்களை வெளியிடக்கூடாது அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்விக்கு  அந்த நடிகர்களே பொறுப்பேற்று  தயாரிப்பாளர்கள் ,  விநியோகஸ்தர்கள் ,  திரையரங்க உரிமையாளர்களின்  நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . 

click me!