சியானின் அடிபொலி சம்பவம்... செண்டமேளம் அடித்து கேரளாவில் கெத்து காட்டிய விக்ரமின் மாஸ் வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Sep 21, 2022, 7:39 AM IST

chiyaan vikram : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன், தற்போது திரைவடிவம் கண்டு திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணியாற்றி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அண்ணனின் துணையோடு பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷ்... நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

playing Chendamelam !!🥁❤️‍🔥 Kerala Launch Event !!🗡️🔥pic.twitter.com/xTuXmIROcg

— Dheera ツ 🦁 (@Dheera_Cvf)

இது பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடர்ந்து 3 நாட்கள் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழு, அடுத்தகட்டமாக வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதன்படி நேற்று கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு கலந்துகொண்டது.

இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவியான செண்டமேளம் வாசிக்கப்பட்டது. அப்போது நடிகர் விக்ரமும் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து செண்டமேளம் வாசித்து அசத்தினார். அவர் செண்டமேளம் வாசித்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ‘நீ ஐஸ்வர்யா ராய் கூட பேசக்கூடாது’ மணிரத்னம் போட்ட கண்டிஷன்... மனம்திறந்த திரிஷா

click me!