ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'செலோ ஷோ'..! இந்த படத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

By manimegalai aFirst Published Sep 20, 2022, 10:56 PM IST
Highlights

ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து குஜராத்தி படமான 'செலோ ஷோ' திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது. இதில் பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. 

'செலோ ஷோ'வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்ததாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 'செலோ ஷோ' என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் படி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். 

மேலும் செய்திகள்: இவங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரு நம்புவாங்க? ரசிகர்களை மெஸ்மரெயிஸ் செய்யும் த்ரிஷா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.

மேலும் செய்திகள்: சேலை அழகில் அச்சு அசல் அம்மா ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஜான்வி... காற்றில் சேலையை பறக்க விட்டு வேற லெவல் போஸ்!
 

இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும் என இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும் என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.  படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம் என்றும், 'செலோ ஷோ' உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும் என்பதே இந்த படத்தின் சிறப்பாகும்.

click me!