
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் திரையுலகிற்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹாட் குயினாக மாறிய யாஷிகா ஆனந்த்... டூ பீஸ் போன்ற குட்டை உடையில் பார்த்தாலே பதற வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி...!
எனவே இந்த சட்டவரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் கமல் ஹாசன், சூர்யா உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களான நீட், சுற்றுச்சூழல், ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா என எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நடிகர் கார்த்தி, நடிகை ரோஹினி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர். திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... மனைவி, மகனுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்...!
இதையடுத்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென” வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.