
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்க உள்ளது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில், திரைப்படம் குறித்து இயக்குனர் ஷங்கரை சந்தித்து பேச வீடு தேடி நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் வந்த போது அவர்களுக்கு தடபுடலாக விருது வைத்து அசத்தியுள்ளார் ஷங்கர். இதனை ராம் சரண் தேஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் வரிசையாக பல உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அர்ஜுன், என வரிசையாக முன்னணி நடிகர்களை வைத்து, பிரமிக்க வைக்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். கதையில் மட்டும் பிரமாண்டம் இல்லை இவருடைய படங்களின் காட்சிகளிலும் பிரமாண்டம் நினைத்ததை விட அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் இவர், 'இந்தியன் 2 ' படம் முடிப்பதற்கு முன்பாகவே, டோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் இயக்கும் படங்களில் பிஸியாகியுள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே அதிகார பூர்வ தகவலும் வெளியான நிலையில், தற்போது நடிகர் ராம் சாரணை வைத்து இயக்கும் படத்தில் முழு கவனத்தையும் இயக்குனர் ஷங்கர் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கரிடம் படம் குறித்து பேசுவதற்காக, தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ஷங்கரின் வீட்டிக்கு வந்துள்ளனர்.
இதனை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராம் சரண், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்... "உங்கள் வீட்டிற்கு வந்தபோது உங்களுடைய குடும்பத்தினர் கொடுத்த வரவேற்பும், விருந்தும் மிக அற்புதம் என தெரிவித்து நன்றிகள் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் இவருக்கு பதிலளிக்கும் விதமாக, 'உங்களுக்கு விருந்து கொடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.