
ரீ-ரிலீஸ் ட்ரெண்டில் தற்போது மற்றுமொரு தமிழ் படம் இணைந்திருக்கிறது. சேரனோட எழுத்துலயும், டைரக்ஷன்லயும் 2004-ல வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆட்டோகிராஃப். இந்த கிளாசிக் ஹிட் திரைப்படம் தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக ரெடியாக உள்ளது. வித்தியாசமான காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவான இதில் ஹீரோவாக செந்தில் குமார் என்கிற கேரக்டரில் இயக்குனர் சேரனே நடித்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நிறைய விருதுகளையும் வென்று குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த அப்டேட்டை புது ட்ரெய்லரோட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். டொவினோ தாமஸ், ஆர். பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், பிரசன்னா, சினேகா, சசிகுமார், பாண்டிராஜ், சமுத்திரக்கனி, பா. ரஞ்சித், ஆரி அர்ஜுனன், சிம்புதேவன், விஜய் மில்டன் என திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் அவர்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஆட்டோகிராஃப் படத்தின் புது ட்ரெய்லர ஷேர் செய்து ரீ-ரிலீஸ் பற்றி அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... முதல்வன் முதல் ஆட்டோகிராப் வரை... நடிகர் விஜய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ
ட்ரீம் தியேட்டர்ஸ் பேனரில் சேரனே இயக்கி தயாரித்த இப்படம் பார்க்கும் போது ஒவ்வொருவரின் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவ காதலை நினைவுகூற செய்தது. ஆத்மார்த்தமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய்யை தான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் சேரன். பின்னர் அவர் ரிஜெக்ட் செய்ததால், வேறு சில ஹீரோக்களிடமும் கதையை கூறி இருக்கிறார். யாரும் செவி சாய்க்காததால் தான் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டார் சேரன். இப்படம் ரிலீஸ் ஆன பின்னர் அவரைவிட இந்த கதாபாத்திரத்திற்கு வேறுயாரும் பொருந்தி இருக்கமாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு சேரனின் நடிப்பு பர்ஸ்ட் கிளாஸ் ஆக இருந்தது.
ஆட்டோகிராப் படத்தில் சேரன் உடன் கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பாப்புலர் படம், சிறந்த பாடகி, சிறந்த பாடல் வரிகள் என மூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்றிருந்தது. தமிழில் ஹிட்டானதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஆட்டோகிராஃப் படத்தை ரீமேக் செய்தார். படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் ஆகும் நிலையில், விரைவில் அதை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். அதற்காக ஏஐ தொழில்நுட்பம் உதவியுடம் வெளிநாட்டில் இருந்தபடி தன்னுடைய காதலிகளை சேரன் நினைவுகூறும் படியான வித்தியாசமான டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 'ஆட்டோகிராப்' பட நடிகை மல்லிகாவா இது? உடல் எடை கூடி அடையாளமே தெரியல! மகன் - கணவரோடு இருக்கும் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.