
டாப் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்து, ஏற்கனவே ரூ.100 கோடி வசூல் நாயகனாக இருந்த சிவகார்த்திகேயனை. கடந்த ஆண்டு வெளியான 'அமரன்' திரைப்படம் தற்போது ரூ.300 கோடி வசூல் நாயகனாக மாற்றி விட்டது. சிவகார்த்திகேயனின் 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஏராளமான ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதே போல் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் என நாளா பக்கமும் சிவர்கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், தற்போது இதற்க்கு நன்றி கூறும் விதத்தில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
“ மதராஸி ” படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்க்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி. தற்போது படப்பிடிப்பில் உள்ள “ பராசக்தி ” படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
SK 23 Title : பராசக்தியை தொடர்ந்து SK 23 படத்துக்கு பழைய டைட்டிலை தூசிதட்டி எடுத்த சிவகார்த்திகேயன்!
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன். என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.