'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இயக்குனர் வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக 'சந்திரமுகி 2' திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆனால் 'சந்திரமுகி 2' திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர அனைவருமே புது நடிகர்கள் தான்.
முதலில் 'சந்திரமுகி 2' படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் வாசு முடிவு செய்த நிலையில், ரஜினிகாந்துக்கு, திரைக்கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்ற கோரி, பி.வாசுவிடம் கூறினார். ஆனால் கதையில் மாற்றம் செய்வதற்கு பதில், நடிகரையே மாற்ற முடிவு செய்து, இந்த படத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்க முடிவு செய்தார் பி.வாசு. அதன் படி இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியான போதிலும், மற்ற படங்களில் ராகவா லாரன்ஸ் பிசியாக இருந்ததால், இந்த படத்தில் நடிக்க தாமதம் ஆனது.
undefined
ஒரு வருடங்களுக்கு மேல் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்துள்ளது. இதனை பட குழுவினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
'சந்திரமுகி 2' படத்தை, லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடித்துள்ள நிலையில், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் என மூன்று இளம் நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராதிகா, வடிவேலு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு RRR படத்திற்கு இசையமைத்து ஆஸ்கர் விருதை வாங்கிய கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பொன்னியின் செல்வன் படத்தின் கலை இயக்குனர் தோட்டா தரணி கலைப்பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
’s 2 shooting has officially packed up. pic.twitter.com/OCFdyNmZUY
— Johnson PRO (@johnsoncinepro)