நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jun 19, 2023, 11:27 PM IST
நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு  

நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் 'ஸ்பை', ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகாலா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார். சரண் தேஜ் உப்பலபதி இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். 

ரொம்ப வல்கரா இருக்கு... மோசமான உடையில் ராஷி கண்ணா காட்டிய எல்லை தாண்டிய கவர்ச்சி! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்றும், ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர் நிகிலின் ரசிகர்களும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் ஏமாற்றமடைந்தனர். 

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், எந்தவித தாமதமின்றி... திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெளிவுப் படுத்தி இருக்கிறார்கள். மேலும் ஜூன் 29 தேதியை இழக்க விரும்பாததால்.. பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 

உண்மையில் இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்யவும்... நிலுவையில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்கவும்.. தயாரிப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமையான கிராபிக்ஸ் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்ட நான்கு நிறுவனங்களை நியமித்திருக்கிறார்கள். 

விஜய் - அஜித் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு! வெளிப்படையாக கூறிய பிரபல சீரியல் நடிகை!

தயாரிப்பாளர்களின் இந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் நாயகனான நிகில் சித்தார்த்தா ட்விட்டரில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதனுடன் ''ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் 'ஸ்பை' வெளியாகிறது'' என்றும், 'சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைக்கு அருகில் இயந்திர துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிகில் நிற்கும்' பிரத்யேக புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

நிகில் சித்தார்த்தா நடித்திருக்கும் 'ஸ்பை' திரைப்படம், திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!