சித்ரா தங்கி இருந்த ஸ்டார் ஓட்டலில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை..! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!

Published : Dec 10, 2020, 03:45 PM IST
சித்ரா தங்கி இருந்த ஸ்டார் ஓட்டலில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை..! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!

சுருக்கம்

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா, சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேம்நாத்துடன் நேற்று தங்கியிருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் ஹேம்நாத் தெரிவித்தார். 

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா, சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேம்நாத்துடன் நேற்று தங்கியிருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் ஹேம்நாத் தெரிவித்தார். இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், போலீசார் பல்வேறு கோணங்களில் சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேதபரிசோதனையின் முதல் கட்ட விசாரணையில், சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டதாகவும், அவரது முகத்தில் உள்ளது சித்ராவின் நகக்கீறல் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் போலீசார் சித்ரா தங்கி இருந்த, நட்சத்திர ஓட்டல் அறையின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்தபோது, அது சரிவர இயக்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த ஹோட்டல் மேனஜர் கணேசனிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஹோட்டலில் பணிபுரியும் மூன்று பேரை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் கூட குற்ற சம்பவங்கள் அரங்கேற கூடாது என்பதால் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா வைத்துள்ள நிலையில், பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்து தங்கும் நட்சத்திர விடுதியில் கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் ஏதேனும் உண்மை மறைக்கப்படுகிறதா என்கிற சந்தேகத்தையும் வரவைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!