குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோம்... கண்ணீர் விட்டு கதறும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 10, 2020, 02:17 PM IST
குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோம்... கண்ணீர் விட்டு கதறும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர்கள்...!

சுருக்கம்

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் குமரன் உள்ளிட்டோர்,  சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகள் அவருடைய மரணத்தில் எழுந்து வரும் நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தற்போது சித்ராவின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஐஸ் பெட்டிக்குள் ரசிகர்கள், திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சக நடிகர், நடிகைகளாக சாந்தி வில்லியம்ஸ், சுஜிதா, ஸ்டாலின், குமரன் உள்ளிட்டோர் காலை முதலே சித்ராவின் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தனர். 

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் குமரன் உள்ளிட்டோர்,  சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. அவங்க அப்பா, அம்மாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட படப்பிடிப்பில் கலகலப்பாக தான் இருந்தார். அதன் பிறகு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் அதிர்ச்சியும், கண்ணீருமாக தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சூர்யாவை போல் நானும் இலவச கல்வி கொடுப்பேன்... அக்கட தேசத்து சூப்பர்ஸ்டாரின் அடிபொலி அறிவிப்பு
Youth Box Office Day 1 : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கென் கருணாஸ்... யூத் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?