உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சித்ராவின் உடல்..! வெளியான அதிர்ச்சி புகைப்படம்...

Published : Dec 10, 2020, 01:50 PM ISTUpdated : Dec 10, 2020, 02:24 PM IST
உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சித்ராவின் உடல்..! வெளியான அதிர்ச்சி புகைப்படம்...

சுருக்கம்

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளதால் வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   

இதனிடையே இன்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். தற்போது 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்த நிலையில் தற்போது சித்ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் மூலம் சித்ராவின் உடல், கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்று, உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இன்று மாலை சித்ராவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!